இந்திய அரசால் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் (NREP) தொடங்கப்பட்டது.

இந்தியாவில் விரைவுத் தபால் (Speed Post) துவங்கப்பட்டது.

தமிழ்நாடு வனப்பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

அன்னை தெரேசா அவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா இந்திய அரசால் வழங்கப்பட்டது.

இந்திரா காந்தி அவர்கள் 1980, ஜனவரி 14 இல் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980 ஆண்டிலிருந்து செப்டம்பர் 27 ஆம் தேதி உலகெங்கம் உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில், மன்னார் வளைகுடா தேசிய பூங்கா நிறுவப்பட்டது.

6 வணிக வங்கிகள் இந்திய நாட்டுடைமையாக்கப்பட்டது.