ஜனவரி,, 01 – கணிணி கோபால் (COBAL) நிரலாக்க மொழியை கண்டறிந்த முர்ரே ஹாப்பர் மறைந்தார்.

ஏப்ரல், 24 ஆம் நாள், பஞ்சாயத்து ராஜ் சட்டம் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், 24 ஆம் நாள் பஞ்சாயத்து ராஜ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

டிசம்பர் 3 – அன்று, வோடபோன் நிறுவனத்தால் உலகின் முதல் குறுஞ்செய்தியான “Merry Christmas” அனுப்பப்பட்டது. 

டிசம்பர், 6 – பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

சரசுவதி சம்மன் விருது மற்றும் இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

பத்தாவது நிதிக்குழு, கே.சி.பந்த் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படுத்தப்படும் காலம் 1995-2000

இந்திய அரசின் கேல் ரத்னா விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ-டி-ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு மாநாடு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்டது.

அன்னை தெரேசா அவர்களது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.

பெண்கள் உரிமைக்காகப் போராடும் சமத்துவம் இப்போது (Equality Now) என்ற அமைப்பைத் நவநீதம் பிள்ளை தோற்றுவித்தார்.

SEBI – Securities Exchange Board of India – இந்திய பங்குச் சந்தையை கட்டுப்படுத்தம் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1988 இல் ஓர் நிர்வாக அமைப்பாக ஏற்படுத்தப்பட்டு 1992 இல் இயற்றப்பட்ட செபி சட்டத்தின் மூலம் சட்டப்படியான அங்கீகாரம் பெற்றது இந்தியாவில் 23 பங்கு மாற்றங்கள் உள்ளன இதில் 21 மண்டல பங்கு மாற்றங்கள் உள்ளது.