ஏப்ரல், 25 – ல் இருந்து உலக சுகாதார அமைப்பு, ஆண்டுதோறும் உலக மலேரியா தினத்தினை கடைபிடித்து வருகிறது.

ஜூன், 29 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது

ஆகஸ்ட், 31 – அன்று, சரத்குமார் அவர்களால், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.

செப்டம்பர், 15 – உலக மக்களாட்சி தினம், ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர், 24 – தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பையை வென்றது.

நவம்பர், 23 – அன்று, மீண்டம் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 31 ஆவது மாவட்டமாக அரியலூர் உருவாக்கப்பட்டது.

பதிமூன்றாவது நிதிக்குழு, டாக்டர். வஜய் எல்.கேல்கார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படும் காலம் 2010-15

கங்கை ஆறு, உலகின் ஐந்தாவது மிக மாசுபடுத்தப்பட்ட நதி என மதிப்பிடப்பட்டது.

அன்னை தெரேசா அவர்களாலின் பிறர் அன்பின் பணியாளர் சபை ஏறத்தாழ 450 அருட்சகோதரர்களையும், 120 நாடுகளில் 60000 சேவை மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இயக்கிக் கொண்டிருக்கும் 5000 அருட்சகோதரிகளையும் கொண்டிருந்தது.

பிரதிபா பாட்டில் அவர்கள் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக 2007 முதல் 2012 வரை பொறுப்பேற்றிருந்தார்.

50 காசுகளாக இருந்த ஒரு தீப்பெட்டியின் விலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக 1 ரூபாயாக உயர்த்தப்பட்டது.