மார்ச், 22 – கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் முதன்முதலாக நாடு முழுவதுமு் 14 மணிநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட தினம்

ஏப்ரல், 7, அன்று, புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

ஜூன், 5 – அன்று, மத்திய அரசு மூன்று வேளான் சட்டங்களை அறிமுகம் செய்தது.

ஆகஸ்ட், 4, அன்று, லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு 234 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டது!

ஆகஸ்ட் 7, ஆம் நாள், துபாயிலிருந்து, கேரளாவின் கொச்சிக்கு, விமானம் தறையிரங்கும் போது விபத்துக்குள்ளானது.

ஆகஸ்ட், 10 ஆம் நாள், சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளை இணைக்கும் Fiber Optic Cable சேவை பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட் , 11- அன்று உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை கண்டு பிடித்தது ரஷ்யா. அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல். மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சாதனை. செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிப்பு.

ஆகஸ்ட், 11 – அன்று, சொத்து பங்கீட்டில் பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போலவே பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு, பாகம் பிரிக்கப்படாத பரம்பரைச் சொத்திலும் பங்கு உண்டு.

ஆகஸ்ட், 19 ஆம் நாள், இந்தியாவில் 3 விமானநிலையங்கள் லீஸ்க்கு வடப்பட்டுள்ளது. அவையாவன, ராஜஸ்தான் – ஜெய்ப்பூர், கேரளா – திருவனந்தபுரம், அசாம் – கவுகாத்தி விமான நிலையங்கள்; தனியார் – பொதுப்பங்களிப்புடன் இயங்க மத்திய அமைச்சவை அனுமதி அளித்துள்ளது.

ஆகஸ்ட், 20 ஆம் நாள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டம் பணி தொடங்கியது; கோயில் கட்டும் இடத்தில் தற்போது மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது, 30 – 40 மாதங்களில் கோயில் கட்டும் பணி நிறைவடையும் என கோயில் கட்டும் பணியை மேற்கொள்ளும் இந்திய அரசு தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட், 15 – அன்று, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: இந்திய அணி முன்னால் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா அறிவிப்பு.

ஆகஸ்ட், 25 – அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் சாதனை. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார்.

ஆகஸ்ட், 28 – கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பயணிகளை, பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க விமான நிறுவனங்களுக்கு விமானத்துறை அமைச்சகம் உத்தரவு!

ஆகஸ்ட், 31, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) காலமானார்!

செப்டம்பர், 17 – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலுருந்து ராஜினாமா செய்தார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்.

செப்டம்பர், 19 – இந்திய வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

செப்டம்பர், 20 – மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர், 30 – அன்று கூறப்பட்ட தீர்ப்பில், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல என்று சி.பி.ஜ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவத்தின் போது எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மசூதி இடிப்பதை தடுக்க முயன்றனர் என்று நீதிபதி எல்.கே.யாதவ் தெரிவித்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் விடுதலை.

டிசம்பர், 08 – மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விசவாயிகள் நாடு தளுவிய அளவில் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர்.

டிசம்பர், 28 – நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரித்து தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

கொரோனா வைராஸானது சர்வேதேச நெருக்கடி நோய் தொற்றாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.

2020 – 2021 முதல் காலாண்டில் இந்தியாவின் GDP (-23.9) ஆக சரிவு. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு ஆகும்.

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை மறுபரிசீலனை செய்ய குழு அமைப்பு – பிரதமர் நரேந்திர மோடி

டென்மார்க் உடன் இந்தியா அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு குறித்த புரிந்துனர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ஹைட்ரோசோனிக் என்ஜின் சோதனையை வெற்றிகரமாக இந்தியா செந்து முடித்துள்ளது. இதன் மூலம் இத்தொழில்நுட்பத்தை கொண்ட உலகின் 6 ஆவது நாடானது இந்தியா.

தெலுங்கு குறும்படமான ‘மானஸனமஹா’ உலகம் முழுவதும் 513 விருதுகளைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்தது.