2021 ஆம் ஆண்டு வரலாற்றில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி, 20 – அமெரிக்காவின் 46 – ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனவரி, 25 – அன்று முதல், இந்தியாவில் ‘வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், அமலுக்கு வந்தது.


பிப்ரவரி, 05 – தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், 110 விதியின் கீழ் 12,110 கோடி ரூபாய் கூட்டிறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தார்.

பிப்ரவரி, 10 – கொரோனா வைரஸ் சீனாவின் ஊகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து பரவவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி, 12 – கலப்பு திருமணம் செய்த பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி, 20 – அன்று 1963 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாகாலாந்து சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடப்பட்டது.

பிப்ரவரி, 25 – அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்வு; 59ல் இருந்து 60ஆக உயர்த்தப்படுகிறது என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!


ஏப்ரல், 14 – சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து முழுவதுமாக தனது படைகளை வெளியேற்றுவதாக அமெரிக்கா அறிவித்தது.


ஆகஸ்ட், 6 – விளையாட்டுத் துறையினருக்கான மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்த் பெயரில், தயான்சந்த் கேல் ரத்னா விருது எனப்பெயர் மாற்றப்பட்டது.


செப்டம்பர், 10 – தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்களை நியமித்தார் இந்திய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த்.

செப்டம்பர், 11 – மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவர் மறைந்த செப்டம்பர், 11 ஆம் தேதி ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என, தமிழக முதலமைச்சர். திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

செப்டம்பர், 20 – மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 5ஜி சோதனை ஓட்டத்தின்போது, விநாடிக்கு 3.7 ஜிகாபிட் என்ற சாதனை வேகம் எட்டப்பட்டதாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் கூறியுள்ளது.


அக்டோபர், 22 – அன்று, தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கரூர், கும்பகோணம் மற்றும் சிவகாசி ஆகியவை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

அக்டோபர், 22 – ஒலியை விட, 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை அமெரிக்கா சோதனை செய்துள்ளது.

அக்டோபர், 22 – சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஒரு ரூபாயிலிருந்து, 2 ரூபாயாக தீப்பெட்டியின் விலை உயர்த்தப்படுவதாக, தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அக்டோபர், 25 – அன்று, ஈராக்கில் சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன் அசீரிய மன்னர்களின் ஆட்சியில் இருந்த பெரிய ஒயின் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.


நவம்பர், 12 – அன்று, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு SpaceX விண்கலம் மூலமாக இந்தியவளியைச் சேர்ந்த ராஜா சாரி என்பவர் சென்றார்.

நவம்பர், 13 – அன்று, ஆசியாவின் முதல் மிதக்கும் திரையரங்கம், காஷ்மீரிலுள்ள தால் ஏரியில் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டது.

நவம்பர், 13 – அன்று, உலகின் முதல் மூச்சு வழியே உள்ளிழுக்கும் கோவிட் மருந்தை சீனா அறிமுகம் செய்துள்ளது. ஹாய்னன் மாகாணத்தில் நடந்த சர்வதேச சுகாதார துறை கண்காட்சியில் சீன ராணுவத்தின் தொற்று நோய் நிபுணர் சென் வேய் மற்றும் CanSino Biologics மருந்து உற்பத்தி நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த மருந்து இடம்பெற்றது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த மருந்தின் சோதனை தொடங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவின் Sinopharm மற்றும் Sinovac ஆகிய ஊசி மூலம் செலுத்தும் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

நவம்பர், 15 – மத்திய சுகாதார அமைச்சகம், இரவு நேர உடற்கூராயுவிற்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் காலவிரயம் குறையும் என்று நம்பப்படுகிறது. மேலும், இரவில் நடத்தப்படும் உடற்கூராய்வுகளை கட்டாயம் வீடியோ பதிவு செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளது.

நவம்பர், 16 – பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியை மீண்டும் பாரம்பரியமான நீல நிறத்திற்கு மாற்ற அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவு பிறப்பித்தார்.

நவம்பர், 19 – அன்று, மிக நீண்ட காலமாக விவசாயிகள் போராடியதன் விளைவாக, மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களையும் ரத்து செய்தது. அவையாவன, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளை பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.

நவம்பர், 19 – கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

நவம்பர் 21 – ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இனி டெஸ்டோஸ்டிரோன் ஒரு தடையல்ல என்று சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மூன்றாம் பாலினத்தவர் ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு.

நவம்பர், 21 – தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுக்கலாம். ஆன்லைன் பதிவக்கட்டணம் ரூ.1 லட்சமும், கூடுதல் வசதிகளை பயன்படுத்த ரூ.1 கோடி வைப்புத்தொகை செலுத்தவேண்டும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

நவம்பர், 24 – அன்று, ஸ்வீடனின், Social Democrat Leadeஐ – ஆன மேக்தலேனா ஆண்டர்சனை (Magdalena Andersson) அந்நாட்டின் முதல் பெண் பிரதமரானார், ஆனால், பட்ஜெட் வாக்கெடுப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் அவர் சிறிது நேரத்திலேயே தோல்வியடைத்ததாக அறிவிக்கப்பட்டார்.

நவம்பர், 25 – பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் கைதிகளில் சுமார் 700 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.

நவம்பர், 27 – அன்று, பெரு நாட்டில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட மனித உடல், தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, லிமா நகருக்கு அருகே, கஜமர்குயில்லா என்னுமிடத்தில், பூமிக்கடியில் வட்ட வடிவில் காணப்பட்ட அறைக்குள், இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு, அமர்ந்த நிலையில் காணப்பட்டது. அதன் அருகே, உணவுப் பொருட்கள் மற்றும் பானைகளும் கிடைத்துள்ளன. சக்லா மலைப் பகுதியில் வாழ்ந்த ஆதிகால மக்களிடைய, இவ்வாறு இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் வழக்கம், நடைமுறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

நவம்பர், 27 – அன்று, ஸ்பெயினில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள் நீர் வற்றியதால் மீண்டும் தோன்றியுள்ளன. லிமியா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் நீர் மின் நிலையம், அணையின் மதகுகளை 1992 ஆம் ஆண்டில் மூடியதால் நீர் தேங்கி Ourense மாகாணத்தின் Aceredo உள்ளிட்ட 5 கிராமங்கள் நீரில் மூழ்கின.


டிசம்பர், 03 – கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற சுமார் ரூபாய் 2,756 கோடி கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

டிசம்பர், 03 – வாரணாசி, பூனே, கொல்கத்தா மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல், பையோமெட்ரிக் போர்டிங் நடைமுறை மூலம் பயணிகள் விமானப் பயணம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

டிசம்பர், 06 – அன்று, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

டிசம்பர், 08 – அன்று, நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இத்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

டிசம்பர், 16 – அன்று, சீனாவில் Xinjiang என்ற மாகாணத்தில் Komuxerik என்ற நகரத்தில் Alimihan Seyiti என்ற பெண் வசித்தார். இவர்தான், சீனாவிலேயே அதிக வயதானவர். 1886 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 135 வயதாகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டில் சீனாவில் உயிருடன் வாழும் அதிக வயதானவர் என்ற அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று, Alimihan Seyiti இறந்தார். இவர், தன் வாழ்க்கையில் மூன்று நூற்றாண்டுகளை கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிக எளிமையான வாழ்க்கை முறையை அவர் வாழ்ந்துள்ளார். நேரத்துக்கு உணவை சாப்பிட்டு , வெயிலில் நீண்ட நேரம் இருப்பது அலிமீகானின் வழக்கமாக இருந்துள்ளது. சில நேரங்களின் தன் கொள்ளு பேரன்களை கூட கவனித்து வந்துள்ளார். Komuxerik நகரத்தில் 90 வயதுக்கு மேல் ஏராளமான முதியவர்கள் வசிக்கிறார்கள். இதனால், இந்த நகரத்துக்கு ‘longevity town என்ற செல்லப் பெயரும் உண்டு. முதியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தனி அதிகாரிகளையும் நியமித்துள்ளது.

டிசம்பர், 21 – வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையிலான தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர், 21 – இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவில் பல தசாப்தங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அறிவித்து புதிய காலண்டர் வெளியீடு.

டிசம்பர், 21 – சிலி நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயது இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றார். மாணவ செயல்பாட்டாளராக இருந்த கேப்ரியல் போரிக், நாட்டிலேயே இளம் வயதில் அதிபரானவர் என்ற பெருமையை பெற்றார்.

டிசம்பர், 21 – வருகின்ற, 2022 முதல் UAE ல் திரைப்படங்களில் வரும் பாரம்பரிய இஸ்லாமிய உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகளை நீக்குவதற்கு பதிலாக 21+ என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்தும் எமிராட்டி மீடியா ஒழுங்குமுறை ஆணையம். வெளிநாட்டினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் முயற்சியாக புதிய நடவடிக்கை

டிசம்பர், 22 – வோடபோன் (Vodafone) நிறுவனத்தால் 1992, டிசம்பர், 3 – அன்று அனுப்பப்பட்ட உலகின் முதல் குறுஞ்செய்தியான “Merry Christmas” சுமார் ரூ.91 லட்சத்திற்கு பாரிசில் நடந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தின் மூலம் கிடைத்த முழுத் தொகையும் ஐநா அகதிகள் முகமைக்கு அனுப்ப முடிவு.

டிசம்பர், 22 – சீனாவில் கண்டறியப்பட்ட அரிய வகை டைனோசரின் படிம முட்டைக்குள் சுமார் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான “பேபி டைனோசர்“ கண்டுபிடிப்பு. முட்டைக்குள் இருக்கும் 27 செமீ நீளமுள்ள குட்டி டைனோசருக்கு “பேபி யிங்லியாங்” என்று பெயர் சூட்டல்

டிசம்பர், 23 – அன்று, மது அருந்துவோருக்கான வயது வரம்பை 25-ல் இருந்து 21-ஆக குறைத்து கலால் திருத்த மசோதா 2021-ஐ சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது ஹரியானா அரசு

டிசம்பர், 25 – அன்று, 12 முதல் 18 வயதினருக்கும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திவரும் நிலையில் சிறுவர்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.

டிசம்பர், 27 – சோமாலியா நாட்டில் ஊழல் புகாரில் சிக்கிய பிரதமர் முகமது ஹூசைனை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார் அதிபர் முகமது ஃபர்மாஜோ. இருவருக்கும் இடையே அதிகார பணிப்போர் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில் திடீர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

டிசம்பர், 27 – இந்தியாவிலேயே முதன் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முதலாக 5ஜி அலைக்கற்றை பயன்பாடு செயல்படுத்தப்பட உள்ளதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர், 28 – பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன கார் வாங்கப்பட்டுள்ளது. Mercedes-Maybach S 650 Guard நிறுவனத்தைச் சேர்ந்த இந்தக் கார் ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டாலும் பாதிக்கப்படாது. 2 மீட்டர் தூரத்தில் குண்டு வெடித்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

டிசம்பர், 29 – உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) நீதிபதியை உருவாக்கியள்ளது சீனா; வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97% சரியான தீர்ப்பு தருவதாக கூறப்படுகிறது.

டிசம்பர், 29 – கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியீடு. விமான போக்குவரத்துக்கு உகந்த இடம், விமானநிலையம் அமைக்க வசதிகள் கொண்ட இடங்களை தேர்வு செய்ய முடிவு

ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள நாடு இந்தியா ஆகும்.

இந்தியா சுதந்திரம் வாங்கிய நாளில் இருந்து முதன் முறையாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷபனம் என்ற பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட உள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமது குடும்பத்தினர் மீது ஷபனம் கோபம் கொண்டார். காதலன் சலீம் என்பவருடன் சேர்ந்து, 7 பேர் கொண்ட தனது குடும்பத்தினரையும் சின்னஞ்சிறு குழந்தையையும் கூட விட்டு வைக்காமல் பாலில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து அவர்களை வெட்டிக் கொலை செய்ததாக அவர் தமது காதலனுடன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஷபனத்துக்கு மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இத்தீர்ப்பையடுத்து மதுரா சிறைச்சாலையில் ஷபனமை தூக்கில் இடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


2021 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசினை டேமன் கேல்கட் (The Promise) வென்றார்.